உலகம்

எவரெஸ்ட்டை அடைந்த முதல் இந்திய மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு டாக்டர் பட்டம்

DIN

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் இந்திய மாற்றுத் திறனாளி பெண் அருணிமா சின்ஹாவுக்கு பிரிட்டனில் உள்ள ஸ்ட்ராத்கிளைட் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கெüரவித்துள்ளது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
 கெüரவ டாக்டர் பெற்ற மகிழ்ச்சியில் உள்ள அருணிமா சின்ஹா, ""இளைஞர்கள் தங்களுடைய இலக்கை அடைவதற்கு முழு முயற்சியுடன் ஈடுபட்டால், அவர்களின் சாதனைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்'' என்றார்.
 கால்பந்து வீரரான அருணிமா சின்ஹா, ஒருமுறை ரயிலில் கொள்ளை முயற்சியை தடுக்க முயன்றபோது கொள்ளையர்களால் தூக்கி வெளியே வீசப்பட்டார். அதில், அவரது இடது கால் கடுமையாக சேதமடைந்ததால், முழங்காலுக்கு கீழே அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. காயம் குணமடைந்த பிறகு, எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் இந்தியப் பெண்ணான பச்சேந்திரி பாலிடம், மலையேறும் பயிற்சி பெற்று வந்தார்.
 அதைத் தொடர்ந்து, கடந்த 2013-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி, உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டின் உச்சியை (8,848 மீட்டர்) அடைந்து சாதனை படைத்தார். இந்தச் சாதனை மூலம், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் இந்திய மாற்றுத் திறனாளி பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
 இதேபோல், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள உயரமான சிகரங்களின் உச்சியை அடைந்தும் அருணிமா சின்ஹா சாதனை படைத்துள்ளார்.
 இவருடைய சாதனைகளைப் பாராட்டி, மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கெüரவித்தது
 குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

SCROLL FOR NEXT