உலகம்

இந்திய பத்திரிகையாளருக்கு பிரிட்டன் ஊடக விருது

DIN

பிரிட்டனில் இந்திய பெண் பத்திரிகையாளர் ஸ்வாதி சதுர்வேதி, 2018-ஆம் ஆண்டுக்கான லண்டன் ஊடக சுதந்திர விருதைப் பெற்றுள்ளார்.
 லண்டனில் "ரிப்போர்ட்டர்ஸ் வித்தெüட் பார்டர்ஸ்' என்ற செய்தியாளர்கள் சங்கம் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்வாதி சதுர்வேதி அந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.
 பல்வேறு பத்திரிகைகளிலும், இணைய இதழ்களிலும் கட்டுரைகளை எழுதி வரும் ஸ்வாதி சதுர்வேதி, மத்தியில் ஆளும் பாஜகவின் தொழில்நுட்ப பிரிவு, சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி மேற்கொண்டு வரும் பிரசார உத்திகளை அம்பலப்படுத்தினார். இது தொடர்பாக, நூல் ஒன்றையும் இவர் எழுதி வெளியிட்டார்.
 இதற்காக, ஊடக சுதந்திர விருதுக்கு ஸ்வாதி சதுர்வேதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்தப் போட்டியில் இத்தாலி, துருக்கி, மொராக்கோ உள்ளிட்ட நாடுகளின் பத்திரிகையாளர்கள் இடம்பெற்றிருந்தனர். எனினும், ஸ்வாதி சதுர்வேதி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். லண்டனில் நடைபெற்ற விழாவில் விருது பெற்ற பிறகு அவர் பேசியதாவது:
 நான் எனது பணியைச் செய்தேன். ஆனால், அதை துணிச்சலான செயல் என்று வர்ணித்து விருதுக்கு என்னைத் தேர்வு செய்திருப்பது வருத்தமளிக்கிறது. பத்திரிகையாளர்கள், அரசின் எதிரிகள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இந்தியாவில் பத்திரிகையாளர் கெüரி லங்கேஷ் தனது வீட்டருகே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது முற்றிலும் தவறான போக்காகும்.
 பத்திரிகையாளர்கள் தங்களுடைய எழுத்துப் பணியை நிறுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால், உலகம் முழுவதும் அரசுகள், எந்தவித விமர்சனத்தையும் சகித்துக் கொள்ள முடியாமல் செயல்படுகின்றன.
 இணையதளம் வாயிலாக பலமுறை அச்சுறுத்தல்களை சந்தித்தேன். அவற்றுக்கெல்லாம் செவி மடுத்தால், என்னால் எனது பணியை செய்ய இயலாது. தற்போதைய நிலையில், பத்திரிகையாளர்கள், குறிப்பாக புலனாய்வு பத்திரிகையாளர்கள் தினந்தோறும் அச்சுறுத்தல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், பத்திரிகையாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் "ரிப்போர்ட்டர்ஸ் வித்தெüட் பார்டர்ஸ்' அமைப்பின் பணி பாராட்டுக்குரியது என்றார் ஸ்வாதி சதுர்வேதி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT