உலகம்

நவாஸ் விடுதலைக்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் ஏற்பு

DIN

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, அந்த நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பு தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஏற்றுக்கொண்டது.
 கடந்த 2015-ஆம் ஆண்டில் பனாமா ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது ஊழல் புகார் எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், நவாஸ் ஷெரீஃபை பிரதமர் பதவியிலிருந்து அகற்றியது.
 மேலும், இது தொடர்பான வழக்கில் நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகளும், அவரது மகள் மரியம் நவாஸுக்கு 7 ஆண்டுகள் மற்றும் மருமகன் முகமது சஃப்தாருக்கு ஓராண்டும் கடந்த ஜூலை மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
 அந்த தண்டனையை கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து, அந்த மூவரையும் சிறையிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT