உலகம்

பிரதமர் மோடி - அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்திப்பு 

DIN

சிங்கப்பூர்: பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் இருவரும் புதனன்று சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

சிங்கப்பூரில் தெற்காசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸும் கலந்து கொண்டுள்ளார். 

இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் இருவரும் புதனன்று சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

இந்த சந்திப்பில் பாதுகாப்பு, வர்த்தக ஒத்துழைப்பு, தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும், இரு தரப்பு மற்றும் உலகளாவிய விவகாரங்களில் பரஸ்பர ஆர்வங்கள் பற்றி விரிவான அளவில் பேசப்பட்டது.
 
இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமுடன் அமைந்திருந்ததாக பின்னர் இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாலர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT