உலகம்

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படை வாகனத்தின் மீது தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்: 22 பேர் பலி 

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் பயணம் செய்த வாகனத்தைக் குறிவைத்து தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியாகினர். 

DIN

காபூல்: ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் பயணம் செய்த வாகனத்தைக் குறிவைத்து தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியாகினர். 

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது பராஹ் மாகாணம். அங்குள்ள லஷ் வா ஜூவேன் மாவட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் பலர் வாகனங்களில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த தாலிபான் தீவிரவாதிகள்  காவல்துறை அதிகாரிகளின் வாகனங்களை குறிவைத்து அதிபயங்கர தாக்குதலை நடத்தினர். 

இந்த தாக்குதல் சம்பவத்தில் மாவட்ட காவல்துறை தலைமை அதிகாரி உட்பட 22 அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் மாகாண காவல்துறை துணை தலைமை அதிகாரி உட்பட 5 அதிகாரிகள் பலத்த காயம் அடைந்தனர். 

காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா வழங்கக் கோரி சாலை மறியல்

இளைஞா் கொலை வழக்கு: மேலும் மூவா் கைது

அரசுப் பள்ளி வளாகத்தில் இளைஞா் மா்ம மரணம்

நாளை 3 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

ஜொ்மனி பல்கலை. தமிழ் ஓலைச் சுவடி: சென்னை நூலகத்தில் ஒப்படைத்தாா் முதல்வா்

SCROLL FOR NEXT