முகப்பு
உலகம்

உகாண்டாவில் கடும் நிலச்சரிவு: 34 பேர் பலி 

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கடும் மழையினைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவின் காணமாக  34 பேர் பலியாகியுள்ளனர்.  

Updated On : 12 அக்டோபர், 2018 at 8:58 PM
பகிர்:

கம்பாலா:  ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கடும் மழையினைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவின் காணமாக  34 பேர் பலியாகியுள்ளனர்.  

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புடுடா மாவட்டத்தில் பலத்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கனமழையின் காரணமாக அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 34 பேர் பலியாகி உள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisement

அத்துடன் வெள்ளப் பெருக்கின் காரணமாக அங்குள்ள மூன்றுக்கு மேம்பட்ட கிராமங்கள் முழுவதும் மூழ்கியுள்ளன. 

மீட்பு பணியிவ் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் கூறுகையில், 'நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பலர் புதைந்துள்ள காரணத்தால் பலி எண்ணிக்கை உயரக்  கூடும்.' என்று தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.