உலகம்

அமிருதசரஸ் ரயில் விபத்து: ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் இரங்கல்

DIN


பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் தசரா பண்டிகையின் போது தண்டவாளத்தில் நின்றிருந்தவர்கள் மீது ரயில் மோதிய விபத்தில் 61 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இந்த விபத்துக்கு ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியிடம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

ரயில்வே தண்டவாளத்துக்கு அருகே நடத்தப்பட்ட தசரா பண்டிகையைக் காணக் கூடிய ஏராளமான மக்கள், தண்டவாளத்தின் மீது நின்றிருந்த போது, அவ்வழியாக வந்த ரயில் அவர்கள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 61 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

காயமடைந்தவர்கள் சுமார் 7 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT