தைவானில் ரயில் விபத்து: 18 பேர் பலி
தைவானில் ஞாயிறு மாலை நடைபெற்ற ரயில் விபத்தில் சிக்கி 18 பேர் பலியானார்கள்.
தைபே: தைவானில் ஞாயிறு மாலை நடைபெற்ற ரயில் விபத்தில் சிக்கி 18 பேர் பலியானார்கள்.
தைவானின் தென்கிழக்கு பகுதியில் கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் நகரம் டைடுங். இந்நகருக்குச் செல்லும் ரயில் தடமானது தைவானிற்கு வரும் சுற்றுலாப்
பயணிகள் மத்தியில் பிரபலமானது.
இந்த டைடுங் நகரை நோக்கி சென்ற ரயில் ஞாயிறு மாலை தடம் புரண்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 160 பேர் காயமடைந்தனர் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி மாலை 4.50 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
சம்பந்தப்பட்ட ரயிலில் 300 பேர் பயணம் செய்ததாக அந்நாட்டு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.