முகப்பு
உலகம்

அகதிகள் விவகாரம்: 3 நாடுகளுக்கு அமெரிக்க நிதியுதவி குறைப்பு

கெளதமாலா, ஹோண்டுரஸ், எல்-சால்வடார் ஆகிய நாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை குறைக்கவிருப்பதாக அமெரிக்க

Updated On : 23 அக்டோபர், 2018 at 1:35 AM
பகிர்:


கெளதமாலா, ஹோண்டுரஸ், எல்-சால்வடார் ஆகிய நாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை குறைக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அந்த 3 நாடுகளையும் சேர்ந்த அகதிகள்தான், வாகனங்கள் மூலம் அமெரிக்காவுக்குள் அதிக எண்ணிக்கையில் வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் டொனால் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
தங்கள் நாட்டு மக்கள், எல்லை கடந்து அமெரிக்காவுக்கும் நுழைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை கெளதமாலா, ஹோண்டுரஸ், எல்-சால்வடார் ஆகிய 3 நாடுகளும் போதிய அளவில் மேற்கொள்ளவில்லை. எனவே, அந்த நாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்படும் என்று அந்தப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.