ஜகார்தா: இந்தோனோஷிய தலைநகர் ஜகார்தாவில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று காலை 6.33 மணிக்கு புறப்பட்டுச்சென்ற பயணிகள் விமானம், புறப்பட்ட 13-வது நிமிடத்தில் இந்திய பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த பயணிகள் நிலை குறிந்த எந்த தகவலும் இதுவரை வெளியாக வில்லை.
லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான லயன் ஏர் விமானம் ஜகார்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு புறப்பட்ட புறப்பட்ட 13 நிமிடங்களில் நடுவானில் மாயமானது. காலை 6.33 மணிக்கு விமானம் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், விமானத்தை தேடி வருகிறோம் என்று இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மாயமான லயன் ஏர் விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளது தெரிய வந்துள்ளது. 210 பேர் பயணிக்கும் வசதிகள் கொண்ட 737 மேக்ஸ் போரிங் ரக விமானத்தில் பயணித்த 188 பயணிகளின் நிலை பற்றி தெரியவில்லை. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.