உலகம்

தேசத் துரோக வழக்கு: அக். 9-ஆம் தேதியிலிருந்து முஷாரஃபிடம் தினசரி விசாரணை

DIN


பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் மீதான தேசத் துரோக வழக்கு வரும் அக்டோபர் மாதம் 9-ஆம் தேதியிலிருந்து தினசரி விசாரிக்கப்படவுள்ளது. 
முஷாரஃபுக்கு எதிராக முந்தைய பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி கடந்த 2013-ஆம் ஆண்டில் தேசத் துரோக வழக்கு தொடர்ந்தது. தனது ஆட்சிக் காலத்தின்போது நெருக்கடி நிலையைக் கொண்டு வந்தது, 100-க்கும் மேற்பட்ட நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தது போன்ற காரணங்களுக்காக முஷாரஃப் மீது இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அவர் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றம் கடந்த 2014-ஆம் ஆண்டு உறுதி செய்தது.
அதுமட்டுமின்றி மேலும் பல வழக்குகளை எதிர்கொண்டுள்ள முஷாரஃப், மருத்துவ சிகிச்சைக்காக சிறப்பு அனுமதி பெற்று கடந்த 2016-ஆம் ஆண்டு துபை சென்றார். எனினும், சிகிச்சைக்குப் பிறகு அவர் நாடு திரும்பவில்லை.
இதையடுத்து தேசத் துரோக வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அதிபர் முஷாரஃபைக் கைது செய்து பாகிஸ்தானிடம் ஒப்படைக்குமாறு இன்டர்போலிடம் அப்போதைய அரசு கோரிக்கை விடுத்தது. 
எனினும், அந்தக் கோரிக்கையை ஏற்க இன்டர்போல் மறுத்துவிட்டது. அரசியல்ரீதியிலான தேசத் துரோக வழக்குகளில் அளிக்கப்படும் தீர்ப்புகளுக்காக, கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவது தங்களது பணி இல்லை என்று இன்டர்போல் தெரிவித்துவிட்டது.
இந்த நிலையில், முஷாரஃப் மீதான தேசத் துரோக வழக்கு திங்கள்கிழமை சிறப்பு நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதி யாவர் அலி தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கினை விசாரித்தது. அப்போது, வரும் அக்டோபர் 9-ஆம் தேதியிலிருந்து தினசரி அடிப்படையில் முஷாரஃப் மீதான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. 
மேலும், இந்த வழக்கு விசாரணையின் போது முஷாரஃபை நீதிமன்றத்தின் முன் கொண்டு வந்து எப்படி நிறுத்தப் போகிறீர்கள் என்பது குறித்து பதிலளிக்கும்படி உள்துறை அமைச்சகத்தை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT