உலகம்

எதிர்க்கட்சித் தலைவர் எதிர்பாரா விடுதலை

தினமணி

ருவாண்டாவில் சிறையிலடைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் விக்டோயிரா இங்கபிரா, யாரும் எதிர்பாராத வகையில் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
 அந்த நாட்டில், சுமார் 2,140 சிறைக் கைதிகளை தண்டனை காலத்துக்கு முன்னரே விடுவிக்க அந்த நாட்டு அமைச்சரவை வெள்ளிக்கிழமை முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட அந்தக் கைதிகளில் ஒருவராக, பயங்கரவாதம், தேசத் துரோகம் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த விக்டோயிராவும் விடுவிக்கப்பட்டார்.
 தம்மை விடுவித்த அதிபருக்கு நன்றி கூறுவதாகத் தெரிவித்துள்ள விக்டோயிரா, தனது அரசியல் போராட்டத்தைத் தொடரப் போவதாக அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT