உலகம்

சிரியா: ஐ.எஸ். தாக்குதலில் 20 குர்து படையினர் சாவு

தினமணி

சிரியாவின் டெயிர் அல்-ஸூர் மாகாணத்தில் அமெரிக்க ஆதரவு பெற்ற குர்து படையினருக்கு எதிராக இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.
 அந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தி, ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியிலிருந்த பல பகுதிகளை குர்துப் படையினர் கைப்பற்றியிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீசிய மணல் புயலை சாதகமாகப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்தது.
 அந்தப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் சண்டையில் இதுவரை 53 பயங்கரவாதிகளும், 37 குர்து படையினரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT