உலகம்

ரூ.1375 கோடிக்கு கைமாறிய பிரபல அமெரிக்க வார இதழ்

DIN

நியூயார்க்: உலகப் பிரசித்தி பெற்ற அமெரிக்காவின் 'டைம்' வார இதழ் ரூ.1375 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்துவெளியாகும் 'டைம்' உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற வார இதழாகும். மெர்டித் கார்ப்பரேசன் நிறுவனத்தால் இந்த இதழ் தொடங்கப்பட்டு 95 ஆண்டுகளை எட்டியுள்ளது. 

இந்நிலையில் டைம் வார இதழை பிரபல 'சேல்ஸ் போர்ஸ்' நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான மார்க் பேனியாபும் அவரது மனைவியும் இணைந்து190 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் ரூ.1375 கோடி) மெர்டித் கார்ப்பரேசன் நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளனர்.

ஆனால் இது சேல்ஸ்போர் நிறுவனத்தின் நேரசடியாக பரிவர்தனையல்ல என்றும் பேனியாபும் அவரது மனைவியும் தனிநபர்கள் என்ற முறையிலேயே டைம் இதழை வாங்கியுள்ளனர் என்றும் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம் பத்திரிகையை வாங்கினாலும், அதன்  அன்றாட நடவடிக்கைகளிலோ இதழியல் சார்ந்த முடிவுகளிலோ பேனியாப் தலையிட மாட்டார் என்றும், அதை தற்போதுள்ள நிர்வாகத் தலைமைக் குழுவே தொடர்ந்து கவனித்துக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்!

நாங்குனேரி மாணவரின் உயா்கல்விக்கு துணை நிற்பேன் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

SCROLL FOR NEXT