உலகம்

வட - தென் கொரிய அதிபர்கள் 3-ஆவது முறையாக சந்திப்பு

DIN

வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளின் தலைவர்களுக்கு இடையே இது 3-ஆவது சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது. 

வட கொரியா மற்றும் தென் கொரியா இடையிலான உறவை பலப்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுத்துவதற்கான தொடர்பு அலுவலகம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

வட கொரியாவின் கேசாங் நகரில் நடைபெற்ற இதற்கான திறப்பு விழா நிகழ்ச்சியில், இரு நாடுகளையும் சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.

அண்டை நாடுகளான வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த சூழலில், அந்தப் பதற்றத்தைத் தணிப்பதற்காக இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இரு நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பல்வேறு நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்ளவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.

இந்த நிலையில், அத்தகைய நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கான தொடர்பாகவும், அணு ஆயுத நடவடிக்கைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன், வடகொரியாவுக்கு நேரில் சென்று அந்நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன் உடன் செவ்வாய்கிழமை சந்தித்தார். 

இவ்விரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையே இது 3-ஆவது சந்திப்பு என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT