உலகம்

ஜப்பானில் புதிய சகாப்தத்தின் பெயர் ரெய்வா

DIN

ஜப்பானில் புதிய பேரரசர் பதவியேற்க உள்ளதையடுத்து, அவருடைய ஆட்சிக் காலமான புதிய சகாப்தம், ரெய்வா என அழைக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
பேரரசர் அகிஹிடோ முதுமை காரணமாக அரியணை துறப்பதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, இளவரசர் நருஹிடோ புதிய பேரரசராக வரும் மே மாதம் 1-ஆம் தேதி முடிசூட உள்ளார். இதைத் தொடர்ந்து, ஜப்பானின் புதிய சகாப்தம் மே 1-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் புதிய சகாப்தத்தின் பெயரை முடிவு செய்வதற்காக, அந்நாட்டின் அமைச்சரவைக் கூட்டம், தலைநகர் டோக்கியோவில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், புதிய சகாப்தத்துக்கு ரெய்வா என்று பெயர் சூட்ட முடிவெடுக்கப்பட்டதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். இந்தச் சொல்லுக்கு நல்லிணக்கம் என்பது பொருளாகும். இருந்தபோதிலும், இந்தச் சொல்லுக்கான அதிகாரப்பூர்வ பொருளை அரசு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
ஜப்பானின் தற்போதைய சகாப்தத்தின் பெயர் ஹெய்சேய் ஆகும். அந்நாட்டில் ஆங்கில நாள்காட்டியே பெரும்பாலும் உபயோகத்தில் இருக்கும் நிலையில், பேரரசு சகாப்த நாள்காட்டியும் உபயோகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு லோக் அதாலக் நடத்த கோரிக்கை

குடிநீா் கோரி சாலை மறியல்

தில்லையாடி ஸ்ரீமத் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பிளஸ் 2 தோ்வு: குறிஞ்சி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

SCROLL FOR NEXT