உலகம்

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு: அமைச்சரவையின் அவசரக் கூட்டத்துக்கு அழைப்பு

DIN


கொழும்பு: இலங்கையில் ஏற்கனவே 7 இடங்களில் குண்டுவெடித்ததில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 8-வது குண்டு இலங்கை தெமட்டகொடா குடியிருப்பு நிகழ்ந்துள்ளது. இதில், 3 போலீஸ் உயரதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஈஸ்டர் பண்டிகையையொட்டி இலங்கையில் தேவாலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அப்போது கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர் கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், கிங்ஸ்பெரி, ஷாங்கிரி லா, சின்னமன் கிராண்ட் ஹோட்டல் என 7 இடங்களில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்த நிலையில், 8-வதாக இலங்கை தெமட்டகொடாவில் குடியிருப்பு பகுதியில் குண்டுவெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது. இதில் 35 வெளிநாட்டினர் அடங்குவர்.

இந்நிலையில், இலங்கையில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு கோழைத்தனமான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இந்த கொடிய தருணத்தில் இலங்கை மக்கள் மன தைரியத்துடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து இலங்கை அமைச்சரவையின் அவசரக் கூட்டத்துக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். குண்டு வெடிப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து நாட்டவர்கள் அதிகயளவில் உயிரிழந்ததாக இலங்கை போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT