முகப்பு
உலகம்

முஸ்லிம்கள் என நினைத்து பாதசாரிகள் மீது காரை மோதிய அமெரிக்கர்

முஸ்லிம்கள் என நினைத்து பாதசாரிகள் மீது அமெரிக்கர் காரை மோதிய விபத்தில் 8 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 27 ஏப்ரல், 2019 at 7:36 PM
பகிர்:

முஸ்லிம்கள் என நினைத்து பாதசாரிகள் மீது அமெரிக்கர் காரை மோதிய விபத்தில் 8 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சான் ஃப்ரான்ஸிஸ்கோ நகரின் அருகிலுள்ள சன்னிவைல் பகுதி போலீஸார் இதுகுறித்து கூறுகையில்,

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த இசையா (34) என்பவர் சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை முஸ்லிம்கள் என்று நினைத்து தனது காரை கொண்டு மோதியுள்ளார்.

Advertisement

இதில் தந்தை, மகன் மற்றும் மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 8 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அந்த ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.

இதனிடையே படுகாயமடைந்த அந்த குடும்பத்தினர் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.