உலகம்

பேஷன் ஷோ மேடையிலேயே மயங்கி விழுந்து இறந்த மாடல் 

பிரேசிலில் நடைபெற்ற பேஷன் ஷோ ஒன்றில் பங்கேற்ற பிரபல மாடல் ஒருவர் மேடையிலேயே மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

DIN

சா பாலோ: பிரேசிலில் நடைபெற்ற பேஷன் ஷோ ஒன்றில் பங்கேற்ற பிரபல மாடல் ஒருவர் மேடையிலேயே மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலில் உள்ள சா பாலோ நகரில் பேஷன் ஷோ ஒன்று நடைபெற்றது. இதில் பிரேசிலின் பிரபல ஆண் மாடலான டெலஸ் சோரெஸ்  கலந்துக் கொண்டார். பேஷன் ஷோவின் போது கேட்வாக் எனப்படும் பூனை நடை நடந்து விட்டு மேடையில் திரும்பினார். அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.

இதில் அவருடைய முகம் பகுதியில் பலத்த காயம் நேரிட்டது. ஆனால் அங்கிருந்த பார்வையாளர்கள் அது நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இருக்கும் என அப்படியே இருந்து விட்டனர். ஆனால் சுதாரித்துக் கொண்ட நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் விரைந்து சென்று உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டார் எனக் கூறியுள்ளனர்.

பேஷன் விழா ஒன்றில் நடந்த இந்த சம்பவம் அங்கு அனைவரது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT