கோப்புப்படம் 
உலகம்

காஷ்மீர் விவகாரம் எதிரொலி: ஆர்எஸ்எஸ்-ஐ சீண்டிய பாக்., பிரதமர் இம்ரான்

ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஹிந்து மேலாதிக்கத்தன சித்தாந்தம், நாஜிக்களின் ஆரிய மேலாதிக்கத்தனத்துடன் ஒத்துப்போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 

DIN


ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஹிந்து மேலாதிக்க சித்தாந்தம், நாஜிக்களின் ஆரிய மேலாதிக்கத்துடன் ஒத்துப்போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அதற்கான எதிர்வினையை ஆற்றி வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தனது டிவிட்டர் பதிவில் ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தாக்கி கருத்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, அவர் பதிவு செய்துள்ள டிவிட்டர் பதிவில், 

"நாஜிக்களின் ஆரிய மேலாதிக்க சித்தாந்தத்தைப் போல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஹிந்து மேலாதிக்க சித்தாந்தம் அச்சமூட்டுகிறது. இது இந்தியா கட்டுப்பாட்டு காஷ்மீரோடு நிற்காமல் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை ஒடுக்கும். பிறகு, அது பாகிஸ்தானையும் குறிவைக்கும். நாட்டின் வளர்ச்சி என்ற ஹிட்லர் பாதையின் மறுவடிவம்தான் ஹிந்து மேலாதிக்கம்.  

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது இன அழிப்பு மூலம் காஷ்மீரின் தன்மையை மாற்றும் முயற்சி ஆகும். ஆனால், உலகம் அதைப் பார்த்துக்கொண்டிருக்குமா என்பதுதான் இங்கு கேள்வி" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT