உலகம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் மசூதியில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி 

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளி மாலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில், ஐந்து பேர் பலியாகியுள்ளனர். 

DIN

குர்லோக்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளி மாலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில், ஐந்து பேர் பலியாகியுள்ளனர். 

பாகிஸ்தானின் வடமேற்கிலமைந்துள்ளது பலுசிஸ்தான் மாகாணம். இங்குள்ள  குச்லோக் என்னும் நகரில் உள்ள மசூதி ஒன்றில், வெள்ளி மாலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

இதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 32 பேர் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மசூதி அருகே நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனம் ஒன்றைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றதாகத் தெரிகிறது.

இந்த குண்டு வெடிப்புக்கு உடனடியாக எந்த ஒரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈவெரா சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

சிறுமியை பாலியல் வன்கொடும செய்த உறவினருக்கு 35 ஆண்டுகள் சிறை

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தோருக்கு பாமகவினா் அஞ்சலி

திருவிடைமருதூரில் 81.2 மி.மீ. மழை

பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை பரிசோதித்த புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT