உலகம்

பிரதமர் மோடியின் இரண்டு நாள் பூடான் சுற்றுப்பயணம் நிறைவு 

தனது இரண்டு நாள் பூடான் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஞாயிறன்று இந்தியா புறப்பட்டார்.

IANS

திம்பு: தனது இரண்டு நாள் பூடான் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஞாயிறன்று இந்தியா புறப்பட்டார்.

இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டதற்குப் பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக வெள்ளியன்று பூடான் பயணம் மேற்கொண்டார். இருநாட்டு உறவுகளை பல்வேறு துறைகளில் மேலும் வலுப்படுத்துவது அவரது பயணத்தின் முக்கிய குறிக்கோளாக அமைந்திருந்தது.

ஞாயிறன்று நாடு திரும்புவதற்கு முன்பாக அவர் பூடான் ராயல் பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றினார். அத்துடன் மறைந்த பூடான் மன்னர் மூன்றாம் துருக் யல்போ நினைவகத்தில் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் பரோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனது சிறப்பு விமானத்தில் மோடி நாடு திரும்பினார்.

இதுதொடர்பாக பூடானுக்கு நன்றி தெரிவித்து இந்திய  வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் ட்வீட் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT