மெக்ஸிகோ மதுபான விடுதியில் பெரும் தீ விபத்து: 23 பேர் பலி
மெக்ஸிகோவில் மதுபான விடுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 23 பேர் பலியானார்கள்.
கோட்ஸாகோல்கோஸ் (மெக்ஸிகோ): மெக்ஸிகோவில் மதுபான விடுதியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 23 பேர் பலியானார்கள்.
மெக்ஸிகோவின் வெராக்ரூஸ் மாநிலத்தில் உள்ள வளைகுடா நகரம் கோட்ஸாகோல்கோஸ். இங்குள்ள எல் கபாலோ பிலாங்கோ என்னும் மதுபான விடுதியில் நடந்த தீவிபத்தில் 23 பேர் பலியாகினர். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர்.
அங்கு நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். போதைமருந்து கடத்தலில் ஈடுபட்டிருக்கும் இரு கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் இந்த விபத்து ஏற்பட்டதாக அந்த மாநில ஆளுநர் கார்சியா உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.