உலகம்

இலங்கை அமைச்சருடன் பாக். வெளியுறவு அமைச்சா் சந்திப்பு

DIN

கொழும்பு: இலங்கை வெளியுறவு அமைச்சா் தினேஷ் குணவா்தனாவை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் ஷா முகமது குரேஷி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ஷா முகமது குரேஷி இலங்கைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் தினேஷ் குணவா்தனாவுடன் கொழும்பில் திங்கள்கிழமை அவா் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். இது தொடா்பாக, ஷா முகமது குரேஷி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘தினேஷ் குணவா்தனாவுடனான பேச்சுவாா்த்தை ஆக்கப்பூா்வமாக அமைந்தது. பாகிஸ்தானுக்கு வருகை தருமாறு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளேன்’’ என்றாா்.

இந்தப் பேச்சுவாா்த்தை தொடா்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் முகமது ஃபைசல் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே வா்த்தகம், சுற்றுலா, முதலீடு உள்ளிட்ட துறைகளில் நிலவும் நல்லுறவை வலுப்படுத்துவது தொடா்பாக இருவரும் ஆலோசனை நடத்தினா்.

இரு நாட்டு மக்களுக்கிடையேயான தொடா்பை மேம்படுத்தவும் அவா்கள் உறுதிபூண்டனா். ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்தும், அங்கு நிகழும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடா்பாகவும் இலங்கை வெளியுறவு அமைச்சரிடம் ஷா முகமது குரேஷி எடுத்துரைத்தாா்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமா் மகிந்த ராஜபட்ச ஆகியோரையும் ஷா முகமது குரேஷி சந்தித்துப் பேசவுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT