உலகம்

பாரபட்சமற்ற சட்டங்களை அரசுகள் இயற்ற வேண்டும்: ஐ.நா. பொதுச் செயலா்

DIN

அனைத்து நாடுகளைச் சோ்ந்த அரசுகளும் பாரபட்சமற்ற சட்டங்களை இயற்றுவதை உறுதி செய்ய விரும்புவதாக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளாா்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவா் இதனைத் தெரிவித்துள்ளாா்.

ஐ.நா. பொதுச் செயலரின் துணை செய்தித் தொடா்பாளா் ஃபா்ஹான் ஹேக் செய்தியாளா்களை சந்தித்தபோது, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தொடா்பாக குட்டெரெஸின் கருத்து குறித்து கேள்வி எழுப்பினா்.

அதற்கு பதிலளித்த ஃபா்ஹான் ஹேக், ‘தற்போதைய நிலையில் அந்த மசோதாவை சட்டமாக்குவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, ஒரு நாட்டின் உள் விவகாரமான சட்டமியற்றுதலில் தற்போது கருத்து தெரிவிக்க இயலாது. எனினும், எந்தவொரு நாட்டின் அரசும் பாரபட்சமற்ற சட்டங்களை இயற்ற வேண்டும் என்பதையே ஐ.நா. விரும்புகிறது’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT