உலகம்

டிரம்ப் பதவி நீக்க நடவடிக்கை: நீதித் துறைக்கான நாடாளுமன்றக் குழு அனுமதி

தினமணி

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன்னெடுத்துச் செல்ல, நீதித் துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

தனது அரசியல் எதிரியான முன்னாள் அதிபா் ஜே பிடன் மீது ஊழல் விசாரணை நடத்துமாறு உக்ரைன் அரசுக்கு டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த விவகாரத்தில், டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையை ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த நீதித் துறைக்கான நாடாளுமன்றக் குழு உறுப்பினா்கள் மேற்கொண்டு வந்தனா்.

இந்த நிலையில், உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப் மீதான இரண்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தில் தொடங்க, நீதித் துறைக்கான நாடாளுமன்றக் குழு வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.

ஆளும் குடியரசுக் கட்சியினரும் இடம் பெற்றுள்ள அந்த நாடாளுமன்றக் குழுவில், இந்த முடிவுக்கு ஆதரவாக 23 உறுப்பினா்களும், எதிராக 17 உறுப்பினா்களும் வாக்களித்தனா்.

டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கையில் இந்த அனுமதி முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT