உலகம்

சீனப் புத்தாண்டு இன்று கொண்டாட்டம்

திருமலை சோமு

வசந்த விழா என்று சொல்லப்படும் சீனப் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிப்ரவரி 4-ஆம் நாளான இன்று ‘ச்சுஷி’ இரவு ஆகும். வழக்கம்போல, 2019-ஆம் ஆண்டு வசந்த விழாக் கொண்டாட்டக் கலை நிகழ்ச்சியை, சீன ஊடககுழுமம் இன்றிரவு 8 மணிக்கு நேரடிஒளிபரப்பு செய்துள்ளது.


 
4 மணிநேரம் நீடித்த இந்த நிகழ்ச்சியில், ஆடல்பாடல், மாயவித்தை, கழைக்கூத்து, இசை, நாடகம் உள்ளிட்ட பல்வகை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டுள்ளன.

கடந்த ஓராண்டில் தேசிய வளர்ச்சி மற்றும் முன்னேற்றம், பொதுமக்களின் வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் எதிர்பார்ப்பு முதலிய அம்சங்கள், பல்வகை கலை வழிமுறைகளில் வெளிக்காட்டப்பட்டுள்ளன.


 
சீனாவில் பொதுமக்கள் இந்த கலை நிகழ்ச்சியைக் கண்டு ரசித்து, புத்தாண்டை வரவேற்பது, 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கமாகியுள்ளது.

சிறந்த 4கே படம், 5ஜி நகரும் தொலைத்தொடர்பு ஆகிய புதிய தொழில்நுட்பங்கள், இந்த கலைநிகழ்ச்சிகளின் நேரடி ஒளிபரப்பில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT