உலகம்

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்

DIN

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளம் சனிக்கிழமை முடக்கப்பட்டது. இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,

அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் புகார்கள் வந்துள்ளன. தொழில்நுட்பப் பிரிவு அதனை சீர்செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், பாகிஸ்தானில் மட்டும் வழக்கம்போல் வெளியுறவுத்துறை இணையதளம் செயல்பட்டு வருகிறது என்றார்.

ஆனால், அரபு நாடுகள், ஆஸ்திரேலியா, பிரிட்டன், நெதர்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இணையதளத்தை இயக்குவதில் சிக்கல் நீடித்து வருவதாக தி டான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும், இணையதளம் முடக்கப்பட்ட விவகாரத்தில் ஹேக்கர்களின் கைவரிசை இந்தியாவில் இருந்து நடைபெற்றுள்ளதாகவும் தி டான் செய்தி வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT