உலகம்

ஈரானில் சரக்கு விமான விபத்தில் 10 பேர் பரிதாப பலி

ஈரானில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில், விமான சிப்பந்திகள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

DIN


ஈரானில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில், விமான சிப்பந்திகள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மோசமான வானிலை காரணமாக, டெக்ரானின் தென்மேற்கு பகுதியில் சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் கிர்கிஸ்தான் நாட்டுக்கு சொந்தமான போயிங் 707 ரக சரக்கு விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான விமானம் உடனடியாக தீப்பிடித்ததால், விமானத்தில் பயணம் செய்த 10 விமான சிப்பந்திகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தகவல் அறிந்து ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் உள்ளிட்ட மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. 

விபத்திற்குள்ளான சரக்கு விமானம் கிர்கிஸ்தானிலிருந்து ஈரானுக்கு மாமிசத்தை சுமந்து சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT