உலகம்

அமெரிக்காவில் விஷமிகளால் சேதப்படுத்தப்பட்ட ஹிந்துக் கோவில் 

DIN

வாஷிங்டன்: அமெரிக்காவில் கெண்டக்கி மாகாணத்தில் உள்ள ஹிந்துக் கோவில் ஒன்று விஷமிகளால் சேதப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் கெண்டக்கி மாகாணத்தில் உள்ள லோஸ்வில்லே நகரத்தில் சுவாமி நாராயண் ஹிந்துக் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்குள் புகுந்த விஷமிகள் சிலர், அங்குள்ள சாமி படங்கள் மீது கருப்பு பெயிண்ட்டை வீசியும், அங்குள்ள ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்தியுள்ளனர்.  அத்துடன் அங்கிருந்த இருக்கை ஒன்றில் கத்தி ஒன்றை குத்தியபடி எச்சரிக்கும் தொனியில் விட்டுச் சென்றுள்ளனர்.

லோஸ்வில்லே நகரில் வசிக்கும் இந்திய வம்சாவழியினர் இந்த சம்பவத்தினால் அதிர்ச்சிகுள்ளாகியுள்ளனர். வெறுப்பின் அடிப்படையில் செய்யப்பட்ட குற்றம் என்று போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

லோஸ்வில்லே நகர மேயர் கிரேக் பிஸ்கர் இந்த அ நாகரீக சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT