உலகம்

ஆப்கானிஸ்தான்: திருமண நிகழ்ச்சியில் சிறுவன் தற்கொலைத் தாக்குதல்: 5 பேர் பலி

DIN


ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியின்போது 13 வயது சிறுவன் நடத்திய மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
அந்த நாட்டின் நங்கர்ஹார் மாகாணத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் 11 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஃபைஸ் முகமது பாபர்கில் கூறியதாவது: நங்கர்ஹார் மாகாணத்தின் பசிர்வா அக்ஹாம் மாவட்டத்தில், அரசு ஆதரவுப் படை உள்ளூர் தளபதி மாலிக் தூர் தலைமையில் திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த 13 வயது சிறுவன், தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில், மாலிக் தூர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்; 11 பேர் காயமடைந்தனர் என்றார் அவர். மாலிக் தூரைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. நங்கர்ஹார் மாகாணத்தில் தலிபான், இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) ஆகிய இரு பயங்கரவாத அமைப்புகளுக்குமே செல்வாக்கு உள்ளதால், அந்த இரு அமைப்புகளில் ஒன்று இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT