உலகம்

தகுதி அடிப்படையில் குடியுரிமை: 57%-ஆக அதிகரிக்க அமெரிக்கா பரிசீலனை

DIN

அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு தகுதி அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படுவதை 57 சதவீதமாக அதிகரிப்பது குறித்து அந்த நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து அதிபர் டிரம்ப்பின் முதுநிலை ஆலோசகரும், மருமகனுமான ஜாரெட் குஷ்னெர் கூறியதாவது:
தற்போது அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்படுபவர்களில் 12 சதவீத்தினர் மட்டுமே தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இந்த விகிதத்தை 57 சதவீதமாக உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். மேலும், அவர்களில் பாதி பேரை அவர்களது குடும்ப சூழல் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் தேர்வு செய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
அவ்வாறு செய்வதால், ஏராளமாக வரி செலுத்தும் நபர்கள் அமெரிக்க சமூகத்தில் இணைவார்கள் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT