முகப்பு
உலகம்

காபூலில் அடுத்தடுத்து 3 வெடிகுண்டு சம்பவம்: 5 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:38 AM
பகிர்:


காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இன்று காலை 8.10 மணியளவில் முதல் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. கிழக்குக் காபூல் பகுதியில் ஓடிக் கொண்டிருந்த பேருந்து மீது தற்கொலைப் படையைச் சேர்ந்த இளைஞர் வெடிகுண்டுகள் நிரப்பிய ஒரு மோட்டார் சைக்கிளைக் கொண்டு வந்து இடித்ததில் மிகப் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரு இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த தொடர் குண்டு வெடிப்பில் 5 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.

கடந்த வாரம் காபூலில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஏராளமானோர் பலியான நிலையில், இன்று மீண்டும் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.