மன்ஹாட்டனில் கட்டடம் மீது ஹெலிகாப்டர் மோதிய விபத்து: சதிச் செயல் இல்லை என்பது உறுதியானது
மன்ஹாட்டனில் 54 மாடி அடுக்குமாடிக் கட்டடத்தின் மீது ஹெலிகாப்டர் மோதிய விபத்தில், விமானியின் அடையாளம் காணப்பட்டுள்ளது.
நியூ யார்க்: மன்ஹாட்டனில் 54 மாடி அடுக்குமாடிக் கட்டடத்தின் மீது ஹெலிகாப்டர் மோதிய விபத்தில், விமானி அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விமானியின் குடும்பத்தாருக்கு விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பயங்கரவாத சதிச் செயல் எதுவும் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
54 மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்தார். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Advertisement
ஹெலிகாப்டர் மோதிய வேகத்தில் கட்டடத்தில் தீப்பற்றியது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டடத்தில் இருந்தவர்களை வெளியேற்றி, தீயை அணைத்தனர். ஆரம்பத்தில் விபத்தை நேரில் பார்த்தவர்கள் அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதல் போன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலோ என்று அச்சம் அடைந்தனர்.
ஆனால், முதற்கட்ட விசாரணையில் மோசமான வானிலை காரணமாகவே இந்த விபத்து நேரிட்டது தெரிய வந்துள்ளது.
விபத்து நிகழ்ந்த போது கட்டடத்தில் இருந்தவர்கள் கூறியதாவது, ஏதோ நிலநடுக்கமோ அல்லது அதுபோன்ற ஏதோ ஒன்று நிகழ்ந்ததாகவே நினைத்தோம். இரண்டு நிமிடம் இருக்கும், அலாரம் அடிக்க ஆரம்பித்துவிட்டது, பாதுகாவலர் ஓடி வந்து அனைவரும் தங்களது அவசிய உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறுமாறு கத்தினார் என்றார்கள்.