உலகம்

கிர்கிஸ்தான் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

DIN

கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பிக்கோவுடன் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கிர்கிஸ்தான் சென்றுள்ளார். மாநாட்டினிடையே அந்நாட்டு அதிபர் ஜீன்பிக்கோவை அவர் சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பாக, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், "கிர்கிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தற்போதைய தலைவருமான சூரோன்பே ஜீன்பிக்கோ வரவேற்றார். மாநாட்டின் இடையே, அதிபர் ஜீன்பிக்கோவை பிரதமர் மோடி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்' என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின், கிர்கிஸ்தான் அதிபர் ஜீன்பிக்கோவுடன் நடத்திய முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பேத்கர் அளித்த உரிமைகளைப் பாதுகாப்பேன்: பிரதமர் மோடி உறுதி!

பொதுமக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் விநியோகம்

தொடா் திருட்டு: இளைஞா் கைது

திருக்குறள் உரை நூல் வெளியீடு

காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT