இஸ்லாமாபாத்: புல்வாமா தாக்குதல் எதிரொலியாக, பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்கா வரும் பாகிஸ்தானியர்களுக்கு விசாவின் கால அளவு குறைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசாவின் கால அளவை 5 ஆண்டுகளில் இருந்து தற்போது 3 மாதமாகக் குறைத்துள்ளது அமெரிக்கா.
இது பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு மட்டும் அல்லாமல், பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தியாளர்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. இந்த தகவலை அமெரிக்க தூதரகம் உறுதி செய்துள்ளது.
இதில்லாமல், அமெரிக்க விசா பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணத்தையும் பாகிஸ்தானியர்களுக்கு மட்டும் உயர்த்தியுள்ளது. இதுவரை 160 டாலர்களாக இருந்த விண்ணப்பக் கட்டணம் தற்போது 192 டாலர்களாக உயர்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.