உலகம்

பயங்கரவாத அமைப்புகளின் சொத்துகள் முடக்கம்: பாகிஸ்தான் நடவடிக்கை

DIN

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹஃபீஸ் சயீது தலைமை வகிக்கும் ஜமாத்-உத்-தாவா, அதன் சார்பு இயக்கமான பலாஹ்-ஏ-இன்சனியாத் ஆகிய அமைப்புகளின் சொத்துகளை பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது.
முன்னதாக, புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு சர்வதேச நெருக்கடி அதிகரித்ததையடுத்து, பாகிஸ்தான் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை ஆணையம் இந்த தடை உத்தரவுகளை பிறப்பித்தது.
இந்நிலையில், தேசிய அதிரடித் திட்டக் குழு சார்பில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது, ஜமாத்-உத்-தவா மற்றும் பலாஹ்-ஏ-இன்சனியாத் ஆகியவற்றின் இரண்டு பயிற்சி மையங்கள் மற்றும் சொத்துகள் முடக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT