எத்தியோப்பியாவில் விமான விபத்து: பயணிகள் உட்பட 157 பேர் பலி?
எத்தியோப்பியாவில் ஞாயிறன்று நிகழ்ந்த விமான விபத்தில் பயணிகள் உட்பட 157 பேர் பலியாகியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அடிஸ் அபாபா: எத்தியோப்பியாவில் ஞாயிறன்று நிகழ்ந்த விமான விபத்தில் பயணிகள் உட்பட 157 பேர் பலியாகியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் தலைநகரான நைரோபிக்கு ஞாயிறு நண்பகல் விமானம் ஒன்று புறப்பட்டது.
அந்த விமானத்தில் விமானப் 8 பணியாளர்கள் மற்றும் 149 பயணிகள் என மொத்தம் 157 பேர் பயணம் செய்துள்ளனர்.
Advertisement
Advertisement
விமானம் புறப்பட்ட 6 நிமிடங்களிலேயே கட்டுப்பட்டு மையத்துடனான தொடர்பை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மேற்கொண்டு தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.