13 ஆயிரம் பயங்கரவாதிகள் கைது: சீனா வெள்ளை அறிக்கை தாக்கல்
சீனா முழுவதும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட 13 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சீனா வெள்ளை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சீனா முழுவதும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட 13 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சீனா வெள்ளை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சீனாவின் ஜிங்ஜாங்க பகுதியில் சுமார் 1 மில்லியன் முஸ்லிம்கள் தற்காலிக முகாம்களில் பிடித்து வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக சீன தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதுகுறித்து சீன அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தது அதில்,
ஜிங்ஜாங் பகுதியில் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை ஆயிரக்கணக்கான பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான மக்களும், நூற்றுக்கணக்கான போலீஸாரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எண்ணற்ற பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே, மக்கள் பாதுகாப்பு கருதி பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கடந்த 2014 முதல் தற்போது வரை 5 ஆண்டுகளில் மட்டும் 12,995 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 1,588 பயங்கரவாத அமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளது. 2,052 பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
4,858 சட்டவிரோத மத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 30,645 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 3,45,229 சட்டவிரோத மத பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று சீஈஎஃப்ஈ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.