உலகம்

திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள்!

DIN

உயிரிழந்து கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து 40 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஃபிலிபைன்ஸில் இளம் வயது திமிங்கலம் ஒன்று உயிரிழந்த நிலையில் சனிக்கிழமை கரை ஒதுங்கியுள்ளது. இதையடுத்து அங்கு வந்த கடல் ஆராய்ச்சியாளர்கள் அந்த திமிங்கலத்தின் உடலை ஆய்வு செய்தனர். 

அப்போது அந்த திமிங்கலத்தின் வயிற்றினுள் 40 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவற்றில் அரிசிப் பைகள், அலங்காரப் பைகள் மற்றும் பலதரப்பட்ட ஷாப்பிங் பைகள் உள்ளிட்டவை அதிகம் இருந்துள்ளது.

தெற்காசிய கடல் பகுதிகளில் இதுபோன்ற குப்பைகளைக் அடைப்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2017-ஆம் ஆண்டின் ஆய்வறிக்கையின் படி ஃபிலிஃபைன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நகரங்களில் தான் அதிகளவிலான குப்பைகள் கடலில் அடைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற ஆய்வுகளின் அடிப்படையில் 57 திமிங்கலங்கள் மற்றும் டால்ஃபின்கள் பிளாஸ்டிக் குப்பைகள் காரணமாக உயிரிழந்துள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT