உலகம்

பேருந்து தீ விபத்தில் 26 பேர் பலி

DIN

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் சுற்றுலா பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக உள்ளூர் தீயணைப்புத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது: 59 இருக்கைகள் கொண்ட சுற்றுலா பேருந்தில், ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த 53 பேர், அண்டை மாகாணமான ஹுனான் மாகாணத்தில் உள்ள சில பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர். அவர்களுடன் சுற்றுலா வழிகாட்டியும்,  2 ஓட்டுநர்களும் இருந்தனர். ஹுனான் மாகாணத்தின் சங்க்தே பகுதியருகே வெள்ளிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தபோது, பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்தில் 26 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 28 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பேருந்தின் 2 ஓட்டுநர்களையும் கைது செய்துள்ளோம். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரிகள் கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT