உலகம்

ஜப்பான் பேரரசராக முடிசூடினார் நருஹிடோ

DIN


ஜப்பானின் 126ஆவது பேரரசராக நருஹிடோ (59) புதன்கிழமை முடிசூடிக்கொண்டார். 
ஜப்பான் பேரரசர் அகிஹிடோ முதுமை காரணமாக செவ்வாய்க்கிழமை அரியணை துறந்தார். அத்துடன் ஜப்பானின் ஹெய்சேய் சகாப்தமும் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, இளவரசர் நருஹிடோ புதிய பேரரசராக புதன்கிழமை முடிசூடினார். 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் முடிசூடிக்கொண்டார். இதைத் தொடர்ந்து, ஜப்பானின் புதிய சகாப்தமான ரெய்வா (அழகிய நல்லிணக்கம்) மே 1ஆம் தேதி தொடங்கியது.
டோக்கியோவில் உள்ள பேரரசர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் பேரரசர் அகிஹிடோ வசம் இருந்த வாள், ஆபரணங்கள் உள்ளிட்ட முக்கியப் பொருள்கள் அனைத்தும் புதிய பேரரசர் நருஹிடோவிடம் அளிக்கப்பட்டன. பேரரசருக்கான அதிகாரப்பூர்வ முத்திரையும் அவருக்கு அளிக்கப்பட்டது.
பொது மக்கள் முன்பாக, வரும் சனிக்கிழமை (மே 4) புதிய பேரரசர் நருஹிடோ உரையாற்ற உள்ளார். இந்த மாத இறுதியில், ஜப்பானுக்கு வருகை தர உள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பையும் அவர் சந்தித்துப் பேச உள்ளார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து வரும் ஜப்பானில் புதிய பேரரசர் முடிசூட்டிக் கொண்டுள்ளது, அந்நாட்டு மக்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT