உலகம்

ஜப்பான் மன்னராக நபுஹிடோ பதவியேற்பு: 10 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு

DIN


ஜப்பான் நாட்டின் புதிய மன்னராக, ஜப்பான் மன்னர் அகிஹிடோவின் மகனும் பட்டத்து இளவரசருமான நருஹிடோ இன்று பதவியேற்றார். 

ஜப்பான் நாட்டின் மன்னர் அகிஹிட்டோ வயது மூப்பு காரணமாக ஓய்வு பெறுவதாகவும், அரசு குடும்பத்தில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டதாவும் அறிவிக்கப்பட்டது. 

உலகின் மிகப் பழைமை வாய்ந்த ஜப்பான் அரச பரம்பரையில், பதவியில் இருக்கும்போதே அரசர் ஒருவர் தனது பட்டத்தைத் துறப்பது 200 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல் முறை ஆகும்.

தலைநகர் டோக்கியோவில் உள்ள அரச மாளிகையில், அரச பதவி துறப்பதற்கான சடங்கள் செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றன.

தனது பிரிவுரையின்போது, ஜப்பான் மக்களுக்கு இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அகிஹிடோ தெரிவித்தார்.

அவருக்குப் பதிலாக, அவரது 59 வயது மகனும், பட்டத்து இளவரசருமான நருஹிடோ ஜப்பானின் அடுத்த அரசராக இன்று முடிசூட்டிக் கொண்டார். 

புதிய மன்னர் முடிசூட்டும் விழாவுக்கான ஏற்பாடுகள் படு வேகமாக நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், இன்று டோக்கியோ இம்பீரியல் அரண்மனையில் 126வது ஜப்பான் மன்னராக நருஹிட்டோ அரச முறைப்படி பதவியேற்றார்.

புதிய மன்னராக நருஹிட்டோ பதவியேற்பை முன்னிட்டு அந்நாட்டில் 10 நாட்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT