உலகம்

நைஜர்: டேங்கர் லாரி வெடித்துச் சிதறி 55 பேர் பலி

DIN


நைஜர் நாட்டின் தலைநகரான நியாமி நகரின் சர்வதேச விமான நிலையம் அருகே பெட்ரோல்  டேங்கர் லாரி திடீரென வெடித்துச் சிதறிய விபத்தில் 55 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். 
பெட்ரோல் எடுத்துச் சென்ற டேங்கர் லாரி, விமான நிலையம் அருகே இருந்த ரயில் பாதையைக் கடக்கும்போது கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. அந்த டேங்கரிலிருந்து கசிந்த பெட்ரோலை சேகரிக்க மக்கள் அங்கு குவிந்தனர்.  அப்போது எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி வெடித்துச் சிதறியதில் 55 பேர் உயிரிழந்தனர். மேலும் 36 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

அந்தமானில் பாஜக முன்னிலை

பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஃபைசாபாத்?

மாற்றத்தைக் கொடுத்த பாரத் ஜோடோ யாத்திரை!

மகாராஷ்டிரம்: நட்சத்திர வேட்பாளர்களின் நிலவரம்!

SCROLL FOR NEXT