உலகம்

ஈஃபிள் கோபுரத்துக்கு 130 வயது

DIN

உலகப் புகழ் பெற்ற ஈஃபிள் கோபுரம் அமைக்கப்பட்டதன் 130-ஆவது ஆண்டு தினம், புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த 1889-ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கண்காட்சியின் நுழைவு வாயிலாக அமைக்கப்பட்ட ஈஃபிள் கோபுரம், கண்காட்சியின் நிறைவுக்குப் பிறகு இடிக்கப்பட வேண்டும் என்று ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்தது.
அந்த கோபுரத்தின் வடிவமைப்பை பிரான்ஸின் பிரபல கட்டடக் கலை வல்லுநர்கள் விமர்சித்தனர். அந்த கோபுரம் இடிக்கப்பட வேண்டும் என்று பல முறை வலியுறுத்தப்பட்டது.
எனினும், ஈஃபிள் கோபுரம் பலராலும் விரும்பப்பட்டு, பிரான்ஸின் மிகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது.
இந்த நிலையில், அந்த கோபுரம் அமைக்கப்பட்டதன் 130-ஆவது ஆண்டு தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
அந்தக் கொண்டாட்டத்தையொட்டி,  ஈஃபிள் கோபுரத்தில் வண்ண மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT