முகப்பு
உலகம்

ஜூன் 7 - ஆம் தேதி ராஜிநாமா: இங்கிலாந்து பிரதமர் தெரசா மே அதிரடி அறிவிப்பு  

பிரெக்ஸிட் ஒப்பந்த விவகாரத்தின் காரணமாக ஜூன் 7 - ஆம் தேதி ராஜிநாமா செய்யய உள்ளதாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே அதிரடியாக அறிவித்துள்ளார்.

Updated On : 24 மே, 2019 at 3:17 PM
பகிர்:

லண்டன்: பிரெக்ஸிட் ஒப்பந்த விவகாரத்தின் காரணமாக ஜூன் 7 - ஆம் தேதி ராஜிநாமா செய்யய உள்ளதாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே அதிரடியாக அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் கடந்த மார்ச் 29-ஆம் தேதியுடன் விலக முடிவு செய்திருந்தாலும், அதுதொடர்பான பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் ஏற்பதில் இழுபறி நீடித்து வந்தது. எனவே இதுதொடர்பான காலக்கெடு  வரும் அக்டோபர்  31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் பிரெக்ஸிட் விவகாரத்தை பிரதமர் தெரசா மே கையாளும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்துக்கான அரசின் பிரதிநிதியாக பொறுப்பு வகித்து வந்த ஆண்ட்ரியா லெட்ஸம் சமீபத்தில் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.  இதன் காரணமாக தெரசா மேக்கு நெருக்கடி அதிகரித்ததாகக் கூறப்பட்டது.

Advertisement

இந்நிலையில் பிரெக்ஸிட் ஒப்பந்த விவகாரத்தின் காரணமாக ஜூன் 7 - ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே அதிரடியாக அறிவித்துள்ளார்.

பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற ஒப்புதலை பெற முடியாததால் ராஜிநாமா செய்யய உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.