உலகம்

இலங்கை: 41 பயங்கரவாதிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

DIN

இலங்கையில் 41 பயங்கரவாதிகளின் வங்கிக் கணக்குகளை அந்நாட்டு அரசு முடக்கியுள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது. இருப்பினும், இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மீது அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியது. அந்த அமைப்புக்கும் இலங்கை அரசு தடை  விதித்தது.
இந்நிலையில், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய 41 பயங்கரவாதிகளின் வங்கிக் கணக்குகளை இலங்கை அரசு தற்போது முடக்கியுள்ளது. இந்த வங்கிக் கணக்குகளில் ரூ.1.34 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. இதற்கு முன்னர் ரூ.1.4 கோடிஇருப்புள்ள வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருந்தன. இந்தத் தொகையுடன் சேர்த்து, ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக இதுவரை ரூ.2.38 கோடி முடக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகங்களில் சிறப்பு ஆதாா் சேவை

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: விசாரணை மே 6-க்கு ஒத்திவைப்பு

சிறப்பு திட்ட முறைகளை பயன்படுத்தி கோடை பயிா்களை பாதுகாக்க அறிவுறுத்தல்

டிடிஇஏ பள்ளிகளில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT