சிட்னி: ஆஸ்திரேலியாவின் பிரதமராக ஸ்காட் மாரிசன் புதனன்று மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.
ஆஸ்திரேலிய நாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து லிபரல் கட்சி உறுப்பினர்கள் ஸ்காட் மாரிசனை மீண்டும் பிரதமராக தேர்வு செய்தனர்.
இதையடுத்து ஆஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் புதனன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கவர்னர் ஜெனரல் சர் பீட்டர் காஸ்குரோவ் முன்னிலையில், ஸ்காட் மாரிசன் மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் துணைப்பிரதமர் மைக்கேல் மெக்கார்மேக் மற்றும் அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக, பழங்குடியினத்தை சேர்ந்த கென் வியாத் என்பவர் அந்நாட்டின் உள்துறை அமைச்சராக பதவியேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.