உலகம்

சீனாவில் வணிகப் பொருட்களை வாங்குவதற்கு மாபெரும் விழா

DIN

நவம்பர் திங்கள் 11-ஆம் நாள், “சீனாவில் வணிகப் பொருட்களை வாங்குவதற்கான மாபெரும் விழா” தினமாகும். இந்நாளில் சீன மின்னணு வணிகத் தளங்களின் விற்பனைத் தொகை முன் கண்டிராத அளவை தாண்டியுள்ளது. 

டிமொ, ஜெடி ஆகிய இரண்டு இணைய தளங்களின் விற்பனைத் தொகை 24 மணி நேரத்திற்குள் 6,750 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. சீனச் சந்தையின் மாபெரும் நுகர்வு ஆற்றலை இத்தொகை உண்மையாக வெளிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சீன மக்களின் தற்போதைய வாழ்க்கை நிலைமை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. மக்களின் மாபெரும் நுகர்வு ஆற்றல், சீனப் பொருளாதார அதிகரிப்பைத் தூண்டும் முதலாவது ஆற்றலாகமாறியுள்ளது. 

நுகர்வு நிலை உயர்வின்படி, தொடர்புடைய துறைகளிலுள்ள விநியோக முறைச் சீர்திருத்தம் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. தொழில் நிறுவனங்களும் வணிகங்களும் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களின் நுகர்வுச் சந்தையை முனைப்புடன் விரிவாக்கி, உயர் தரத்தை நோக்கி வளரும் சீனச் சந்தையின் உயிராற்றலை அதிகரித்து வருகின்றன. 

மேலும், சீனா வெளிநாட்டுத் திறப்பை தொடர்ந்து ஆழமாக்கி, தொழில் நடத்தலுக்கான சூழலை மேம்படுத்தி, உலகத்துடன் வளர்ச்சி வாய்ப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இதன் விளைவாக, “சீனாவில் வணிகப் பொருட்களை வாங்குவதற்கான மாபெரும் விழா”, பல வெளிநாட்டுத் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான வாய்ப்பாக மாறியுள்ளது. 

2-ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் கலந்துகொண்ட 113 நிறுவனங்கள் டிமொ இணையதளத்தில் நுழைந்து முதன்முறையாக சீனச் சந்தையில் காலடி வைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT