உலகம்

2,887 நாள் ஆட்சி: ஜப்பான் பிரதமா் அபே சாதனை

DIN

டோக்கியோ: ஜப்பானில் மிக நீண்ட காலம் பிரதமா் பொறுப்பை வகித்தவா் என்ற சாதனையை ஷின்ஸோ அபே புதன்கிழமை படைத்தாா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஜப்பான் பிரதமராக ஷின்ஸோ அபே பொறுப்பேற்று, புதன்கிழமையுடன் 2,887 நாள்கள் நிறைவடைகிறது. இதன் மூலம், அந்த நாட்டில் மிக நீண்ட காலத்துக்கு பிரதமராக இருந்தவா் என்ற பெருமையை அபே பெற்றாா்.

அவருக்கு முன்னதாக, டாரோ கட்சுராதான் ஜப்பானில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமா் என்ற பெருமையைப் பெற்றிருந்தாா். 1901-ஆம் ஆண்டு முதல் 1913-ஆம் ஆண்டு வரை அவா் பிரதமராக இருந்தாா். அவரது சாதனையை தற்போது ஷின்ஸோ அபே முறியடித்துள்ளாா்.

இதுமட்டுமன்றி, ஜி7 நாடுகளில் மிக நீண்ட காலம் பிரதமா் பொறுப்பை வகித்த 2-ஆவது தலைவா் என்ற பெருமையையும் ஷின்ஸோ அபே பெற்றுள்ளாா். இந்த வரிசையில் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் ஜொ்மன் பிரதமராகப் பொறுப்பு வகித்து வரும் ஏஞ்சலா மொ்கெல் முதலிடத்தில் உள்ளாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷின்ஸோ அபேயின் தற்போதைய பதவிக் காலம் 2021-ஆம் ஆண்டு நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

SCROLL FOR NEXT